விஜய் சேதுபதிக்காக வரிசை கட்டும் முன்னணி நடிகைகள்? : அதிர்ச்சியில் த்ரிஷா

‘நானும் ரவுடி தான்’ படத்துக்குப் பிறகு மீண்டும் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

முன்பு போல் ஏனோ தானோ என்றில்லாமல் படங்களை கமிட் செய்வதால் கைவசம் தற்போது அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.

இதனால் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க முன்னணி நடிகைகள் பலரும் போட்டி போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ‘நானும் ரவுடி தான்’ இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் புதுப்படத்தில் மீண்டும் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் இரண்டு நாயகிகள் என்பதால் ஒருவர் நயன்தாராவும், இன்னொருவராக த்ரிஷாவையும் கமிட் செய்ய பேச்சு வார்த்தை நடந்தது. இதில் நயன்தாராவை விட தனக்கு சம்பளம் குறைவு என்று கேள்விப்பட்டதும் கோபத்தில் படத்திலிருந்து விலகினார் த்ரிஷா.

த்ரிஷா போனால் என்ன? இப்போது அந்த கேரக்டரில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம் எமி ஜாக்சன்.

அதேபோல கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகும் மற்றொரு புதுப்படத்திலும் முன்னணி நாயகி ஒருவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதியின் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாவதால் அவருடன் ஜோடி போட முன்னணி நடிகைகள் பலரும் போட்டு போடுவதைப் பார்த்த த்ரிஷா அவசரப்பட்டு படத்திலிருந்து விலகி விட்டோமோ? என்று நடப்பதை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

Ami JacksonNayantharaTrishaVijay Sethupathiஎமி ஜாக்சன்த்ரிஷாநயன்தாராவிஜய் சேதுபதி
Comments (0)
Add Comment