ரஜினியுடன் மோதப்போகும் விஜய்சேதுபதி!

ஜினி படத்தில் நடிக்கிற சான்ஸ் கிடைத்தால் யார் தான் நோ சொல்வார்கள்.

அப்படித்தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதுப்படத்தில் சான்ஸ் வந்ததும், உடனே கதை கூட கேட்காமல் வில்லனாக நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி.

அதற்கு ரஜினி படம் என்பது மட்டுமில்லாமல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவருடைய நெருங்கிய நண்பர் என்பதும் கூடுதல் முக்கிய காரணம்.

முன்னதாக இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூனில் 40 நாட்களை வரை நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உடன் பாபி சிம்ஹாவும் பங்குபெற்ற காட்சிகளை படமாக்கி விட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளது. இப்படப்பிடிப்பில் வில்லனாக ரஜினியுடன் மோதும் காட்சிகளில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி.

முனிஷ்காந்த், மேஹா ஆகாஷ், தீபக் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

rajiniRajinikanthVijay Sethupathi
Comments (0)
Add Comment