தனுஷுக்கு வில்லன்! : சந்தோஷமாக ஓ.கே சொன்ன விஜய் சேதுபதி

ரு வழியாக பலகட்ட தடங்களைத் தாண்டி ‘வட சென்னை’ படத்தை ஆரம்பித்து விட்டார் இயக்குநர் வெற்றிமாறன்.

‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’ படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இப்படத்தை  லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

ஒரே படமாக இல்லாமல் ‘வட சென்னை’யைப் பற்றி முழுமையாக சொல்லப்போகும் படமென்பதால் இதை மூன்று பாகங்களாக எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இதனாலேயே இந்தப்படத்தில் நடிக்க முதலில் சம்மதம் சொன்ன சமந்தா, விரைவில் தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவுடன் திருமணம் கை கூடும் என்பதால் மூன்று பாகங்களுக்கு தேதி கொடுக்க முடியாத சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்து அந்தப்படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் அவருக்குப் பதில் நடிகை அமலாபால் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

எப்படி நாயகியை கமிட் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதோ? அதேபோல தனுஷுக்கு வில்லனாக நடிக்க யாரை அணுகலாம் என்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

ஜீவா உட்பட பல முன்னணி ஹீரோக்களை கேட்டுப்பார்த்தும் எல்லோரும் கிரேட் எஸ்கேப் ஆகி விட இப்போது தனுஷ்க்கு வில்லனாக நடிக்க சந்தோஷமாக முன் வந்திருக்கிறாராம் நடிகர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரவுடி தான்’ படத்தை எடுத்தவர் தனுஷ் என்பதோடு மட்டுமில்லாமல் இந்தக் கதையில் வில்லனாக நடிப்பதே பெருமையானது என்பதால் தான் ஓ.கே சொன்னாராம்.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்தாலும் அவரை படத்தில் ஒரு கேரக்டராக மட்டுமே பார்த்தால் எப்படி ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் ரசிகர்கள் அருண் விஜய்க்கு வரவேற்பு கொடுத்தார்களோ அதே போல விஜய் சேதுபதிக்கும் தனுஷ் ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்று நம்பலாம்.

Dhanushvada chennaiVijay Sethupathiதனுஷ்வட சென்னைவிஜய் சேதுபதி
Comments (0)
Add Comment