‘விஜய் டிவி’ ராமருக்கு ஜோடியான நிக்கி கல்ராணியின் அக்கா!

ன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் ஹீரோவாகிறார் விஜய் டிவி புகழ் ராமர்.

சூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதார் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த கற்பனை, காமெடி, திரில்லர் திரைப்படத்தை, மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்தார்.

அவதார் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ரவி குமாரசுவாமி மற்றும் சிவகுமார் குமாரசுவாமி, சூப்பர் டாக்கீஸுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ‘விஜய் டிவி’ புகழ் ராமர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நாயகியாக கோலோச்சிய சஞ்சய் கல்ராணி நடிக்கிறார். இவர் நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா என்பது கூடுதல் தகவல்.

‘தமிழ் இனி’ குறும்படத்தின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி நடத்திய ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரின் மனிதிலும் ஒருங்கே இடம் பிடித்த மணி ராம் இப்படத்தின் இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பல முகங்கள் இருக்கிறது. இந்த கற்பனை, காமெடி, திரில்லர் படம் ஒவ்வொரு மனிதனும் தன்னை மறைத்து கொள்ளும் பல்வேறு முகமூடிகளை கற்பனையும் நகைச்சுவையும் கலந்து த்ரில்லிங்காக படம் பிடித்து காட்டுகிறது. இந்நிலையில் ஒரு முகமூடி கலைந்தால், அதன் எதிர்வினை மற்றும் பதில்களையும் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் நம் கண்முன் கொண்டு வர இருக்கிறது இப்படம்.

படத்திற்கு ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்க உள்ளது.

Movie NewsSanjana GalraniVijay TV Ramar
Comments (0)
Add Comment