விஜய், அஜித் வில்லன்களுடன் மோதும் ஜெய்!

ஜெய் சூப்பர் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’.

இந்தப் படம் பற்றி அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே படத்தில் அவர் யாருடன் மோதுவார் என்பதை அறியும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது.

படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் அஜித்குமாரின் வேதாளம் பட வில்லன் ராகுல் தேவ்வும் விஜய்யின் சுறா பட வில்லனான தேவ் கில்லும் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

“ஜெய்யை நாயகனாக நடிக்க முடிவெடுத்த போதே, எங்கள் அடுத்த வேலை, தோற்கடிக்க முடியாத ஒரு வில்லனை தேடும் படலத்தில் தொடர்ந்தது. நிறைய விஷயங்களை மனதில் வைத்து வில்லனை தேடியபோது, ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோரை நடிக்க வைக்க முடிவெடுத்தோம்.

இந்த படத்தில் இருவரும் சகோதரர்களாக நடிக்கிறார்கள், ராகுல் தேவ் ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச தாதாவாக நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதர் தன்னுடைய மக்களின் நலனுக்காக சூப்பர் சக்திகளை வைத்து எப்படி போராடுகிறார் என்பது தான் கதை” என்றார் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.

இவர் அந்நியன், முதல்வன் உட்பட 90க்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். ஜெய்க்கு ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். நாகர்கோவில் சார்ந்த திருக்கடல் உதயம் படத்தை தயாரிக்கிறார்.

Breaking NewsJaiMovie News
Comments (0)
Add Comment