பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
மேலும் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவிவர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாகசம், என பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக தயாராகியிருக்கும் இப்படம் தமிழில் டப் ஆகி வெளிவர இருக்கிறது.
படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க, ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளை படமாக்க மட்டும் 11 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.
டி வி வி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் “வினயை விதேயா ராமா” பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.