லட்சுமிமேனன் வேண்டாம் : இது விஷாலின் முடிவாம்!

‘பாண்டியநாடு’ படத்தில் விஷாலுடன் ஜோடி போட்டிருந்தார் லட்சுமிமேனன்.

அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் தனது அடுத்த தயாரிப்பான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் அவரையே கதாநாயகியாக்கினார்.

புதிதாக ‘கொம்பன்’ பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ‘மருது’ படத்தை தயாரித்து நடிக்க கால்ஷுட் கொடுத்திருக்கிறார் விஷால்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமிமேனனை கமிட் செய்ய முடிவு செய்திருந்தார் இயக்குநர் முத்தையா.

ஆனால் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் லட்சுமிமேனன் வேண்டாம், வேறு ஒரு கதாநாயகியைப் பாருங்கள் என்று கண்டிஷனாக சொல்லி விட்டாராம் விஷால்.

நீக்கத்துக்கான காரணம் தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார் லட்சுமிமேனன்.

என்ன செய்வது படத்தோட தயாரிப்பாளர் விஷால் ஆச்சே..? அவர் ஒரு முடிவெடுத்தா அதை கேட்டுத்தானே ஆகணும்.

Lakshmimenonvishal
Comments (0)
Add Comment