யாருன்னே தெரியல… போன் பண்ணி அசிங்கமா திட்றாங்க..! : விஷால் போலீசில் புகார்

டிகர் சங்கச் செயலாளர் ஆன பிறகு விஷாலுக்கு பொறுப்புகளும் அதிகமானது போல, பிரச்சனைகளும் அவர் காலைச் சுற்றி தலை வரை எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கின்றன.

அதில் உச்சகட்டமாக அவருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது தான் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து விஷால் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார் அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது :

சமீபத்தில் இணையதளம் ஒன்றில், ”தமிழக மக்கள் சோம்பேறிகள் , அவங்களுக்கு மதுக்கடை போதும்” என்ற தலைப்பில் விஷால் கூறியதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள். இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

தமிழக மக்களை நான் பெரிதும் மதிக்கின்றேன். என் மீது வீண்பழி சுமத்துவது போல் இந்த செய்தியை வெளியிட்டுள்ள அந்த வலைதளத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற வலைதளத்தில் உண்டாக்கப்படும் செய்தியால் தமிழக மக்களின் மனதில் வேற்றுமையை உண்டாக்க வழி செய்கிறார்கள்.

மேலும் சமீபகாலமாக முகம் தெரியாத நபர்கள் போன் மூலம் (+96896520944 , +19196382854, +14436360331 ) என்கிற எண்கள் மூலமாக தகாத வார்த்தைகளால் என்னை திட்டுகிறார்கள். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஷால் தரப்பில் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பதவிக்குன்னு வந்துட்டாலே பிரச்சனைகள் தான் போல…?

Actor VishalInternetMobile CallNadigar SangamProducer CouncilvishalWebsite
Comments (0)
Add Comment