‘சர்வீஸ் சரியில்லை என்று விலக நடிகர் சங்கம் ஒன்றும் கிளப் இல்லை’! : சிம்புவுக்கு விஷால் பதிலடி

டிகர் சங்கத்திலிருந்து விலகப் போகிறேன் என்று கருத்து சொல்லவும் சிம்பு மீது அவருடைய அப்பா டி.ஆருக்கே வருத்தம் தான்.

ஒரே வீட்டில் பக்கத்து அறையில் இருக்கும் மகனுக்கு கூட அறிக்கை விட்டு சிம்பு நீ உன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து என்று மீடியாக்கள் மூலம் அறிக்கை விட்டு காமெடி செய்து கொண்டிருந்தார்.

சிம்புவின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சங்க நிர்வாகிகளின் ஒருவரான நடிகர் விஷால் நடிகர் சங்கம் ஒன்றும் லீ கிளப்போ? ஆந்திரா கிளப்போ இல்லை என்றார் காட்டமாக…

நடிகர் சங்கத்துல இருந்து நான் விலகிக்கிறேன்னு சொல்லியிருக்கிறார் சிம்பு. அவருடைய கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் எனக்கு சர்வீஸ் புடிக்கல, நான் மெம்பர்ஷிப்பை கேன்சல் பண்ணிக்கிறேன்னு சொல்றதுக்கு நடிகர் சங்கம் ஒன்றும் ‘லீ கிளப்போ’, ‘ஆந்திரா கிளப்போ’ இல்லை.

இந்த சங்கம் எங்களுக்கே புதுசாத்தான் இருக்கு. இப்பவும் நான் சிம்புவின் கருத்தை மதிக்கிறேன். ஆனால் நாங்கள் எந்த வகையிலும் தவறு செய்யவில்லை. இந்த நட்சத்திர கிரிக்கெட்டை எப்படி நடத்தணும்னு நெனைச்சோமோ அதை செஞ்சிட்டோம். ஆனா இது தவிர்க்கப்படணும். எல்லோருமே ஒற்றுமையா இருக்கணும்னு தான் நாங்க விரும்புறோம்” என்றார் விஷால்.

மேலும் இதுகுறித்து பேசிய நடிகர் பொன் வண்ணன் “ ‘பீப் சாங்’ விவகாரத்துல சிம்புவுக்கு பிரச்சனை வந்தப்போ அவரை ஒரு மன்னிப்பு கடிதம் மட்டும் கொடுங்க. நாங்க பார்த்துக்கிறோம்னு நட்பு ரீதியா கேட்டோம். அவரும் அதற்கு ஒப்புக்கிட்டார். ஆனால் இடையில என்ன நடந்துச்சுன்னு தெரியல. அவர் அதுக்கு ஒப்புக்கல. அப்புறம் அந்த விஷயம் வேறு பாதையில போயிடுச்சு.

அது நடந்து மூன்று மாசங்களுக்கு மேல ஆகி விட்ட போதும் அவர் நடிகர்களை கோமாளியாகவும், காமெடியர்களாகவும் பயன்படுத்தி விட்டார்கள் என்று நட்சத்திர கிரிக்கெட் பற்றி கருத்து சொன்னது தான் எங்களுக்கு சங்கடமாகி விட்டது. ஏனென்றால் நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு மூத்த கலைஞர்களையும் தேடிப்பிடித்து தேடிப்பிடித்து கொண்டு வந்து பங்குபெறச் செய்தோம்.

அவர் எந்த நோக்கத்துல சொல்லியிருந்தாலும் சரி, சிம்பு அவர்கள் இந்த சங்கத்துல இணைஞ்சு பணியாற்ற வரணும் என்பதையே விரும்புகிறோம். இதை அரசியலாக்க விரும்பவில்லை என்றார்.

இவ்வளவு தன்மையோட சொல்றாங்க, இன்னும் எதுக்கு முரட்டு பிடிவாதம் சிம்பு?

Nadigar SangamNatchathira CricketSimbuvishalசிம்புநடிகர் சங்கம்நட்சத்திர கிரிக்கெட்விஷால்
Comments (0)
Add Comment