எவ்வளவு அடிச்சாலும் வாங்கிக்குவேன்! : விஷால் ஏன் இப்படி மாறிட்டார்?

‘காரியம் பெருசா? வீரியம் பெருசா’ என்று விஷாலிடம் கேட்டால் இப்போதைக்கு அவர் ”காரியம் தான் பெருசு” என்பார்.

நடிகர் சங்கத்தை கைப்பற்றிய கையோடு இப்போது தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடுவது பல தயாரிப்பாளர்களுக்கு பெரும் எரிச்சலாக மாறியிருக்கிறது.

அந்த எரிச்சலில் நடிகர் சங்க வளாகத்தில் ஆரம்பித்து, ஏறுகிற எல்லா விழா மேடைகளிலும் விஷாலைப் பற்றி பச்சைப் பச்சையாக கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெறோருவராக இருந்தால் இந்நேரம் கோர்ட்டுக்கு படியேறிருப்பார். அந்தளவுக்கு விஷாலுக்கு எதிரான பேச்சுகள் வந்து கொண்டிருந்தாலும் எந்த கருத்துக்கும் எதிர்க் கருத்து தெரிவிக்காமல் தேர்தலே கண்ணாய் வேலைகளில் இறங்கியிருப்பவரை சமீபகாலமாக எந்த பட விழாவாக இருந்தாலும் அதில் பார்க்க முடிகிறது.

நேற்று நடந்த ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடித்திருக்கும் ‘ஜெயிக்கிற குதிர’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனிலும் ஆஜராகியிருந்தார்.

நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது “உன்னோட படத்தின் ஆடியோ பங்ஷனுக்கே போக மாட்டியே.. நீ எப்படி? என ஆர்யா கேட்டான். அப்போது “இன்னும் 2 வருடத்துக்கு திரையுலகம் இப்படித் தான் இயங்கப் போகிறது. நம்ம சம்பந்தப்படாத படமாக இருந்தாலும், அதையும் விளம்பரப்படுத்துவது தான் எங்களுடைய நோக்கம்” என்று சொன்னேன்.

‘ஜெயிக்கிற குதிர’ டைட்டிலே அருமையாக உள்ளது. ஷக்தி சிதம்பரம் சார் தொடர்ச்சியாக படம் தயாரிக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். எஸ்.ஏ.சி, தேனப்பன், டி.சிவா அனைவருமே நண்பர்கள் தான். அனைவருக்குமே சொல்லிக் கொள்வது ஒன்று தான். என்னை எவ்வளவு திட்டினாலும், கோபமே வராது. ஏனென்றால் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறேன்.

“கைது செய். கைது செய். விஷாலை கைது செய்” என்ற செய்தியைப் பார்த்து விட்டு எனது அம்மாவும் அப்பாவும் இருவருமே ”சூப்பர் காமெடிடா இது” என காமெடி சேனல் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டில் இந்த மாதிரி விஷயங்களைத் தான் ரசித்துப் பார்ப்பார்கள்.

நல்லது செய்தால் இவ்வளவு தடைகள் வருமா? என்பதை கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் பார்த்து விட்டேன். மேலும், அந்த தேர்தலில் ராதாரவியை பார்த்து விட்டேன். அதைத் தாண்டி எனக்கு போட்டியே இல்லை.

நடிகர் சங்கத்தில் நாங்கள் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையுமே நிறைவேற்றி விட்டோம். ஒரே ஒரு வாக்குறுதிக்கான அறிவிப்பு மட்டும் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ளோம்.

என்னை வளர்த்த திரையுலகம் நல்ல பாதையில் செல்ல வேண்டும் என இளைஞர்கள் வந்துள்ளோம்” என்றார்.

எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கார் போல..?

JeevanJeyikkira KuthiraJeyikkira Kuthira Audio Launchvishal
Comments (0)
Add Comment