தமிழில் ‘காதல் ரோஜாவே’ என்ற படத்தில் அறிமுகமான நாயகி பூஜா குமார் அந்தப்படம் தோல்வியடைந்ததால் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் செட்டிலானார்.
பல வருடங்களுக்குப் ‘பிறகு விஸ்வரூபம்’ படமெடுக்க அமெரிக்காவுக்குப் போன கமலை நேரில் சந்தித்து, நெருக்கமாகி அந்தப்படத்தில் ஒரு நாயகியாகவும் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
‘விஸ்வரூபம்’ பெரிதாகப் பேசப்பட்டாலும், படத்தில் நடித்த பூஜா குமாருக்கு புதிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இதனால் தனது ‘உத்தம வில்லன்’ படத்தில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் கமல்.
அப்படியும் பூஜாவை சீண்டும் இளம் ஹீரோக்கள் யாரும் இல்லாததால் அப்செட் ஆனவருக்கு இப்போது பிரபு படம் கை கொடுத்திருக்கிறது.
ஆமாம், கமலைத் தொடர்ந்து ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம் பூஜாகுமார்.
இளம் ஹீரோக்களுடன் ஜோடி போடலாம் என்கிற ஆசையில் தான் மீண்டும் நடிக்க வந்தார் பூஜா குமார்.
ஆனால் வருவதெல்லாம் வயசான ஹீரோக்களுக்கு ஜோடி போடும் வாய்ப்பு தான். இதனால் நொந்து போயிருக்கும் பூஜா இனி இளம் ஹீரோக்கள் ஜோடியாக வாய்ப்பு வந்தால் தமிழில் நடிப்பது, அல்லது அமெரிக்காவுக்கே சென்று செட்டிலாகி விடுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம்.