திரையுலக விழாக்களில் விவேக் பேச்சைக் கேட்பது என்றாலே தனி ப்ரியம் தான். அந்தளவுக்கு பேசுகிற ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை கலந்து பேசுவார்.
யாரையும் புண்படுத்தும் வார்த்தைகளை அவர் எப்போதுமே தனது பேச்சில் கலப்பதில்லை. இருந்தாலும் அடுத்தவர்களை குற்றம் சாட்டி பேசியிறாத விவேக்கையே பேச வைத்து விட்டார் நயன்தாரா.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு விவேக் நடிப்பில் தீபாவளி ட்ரீட்டாக ரிலீசாகப் போகிறது கார்த்தியின் காஷ்மோரா. இந்தப் படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடித்திருக்கும் விவேக் வழக்கமான தனது நகைச்சுவை ஏரியாவிலும் கலக்கியிருக்கிறார். விவேக்கின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் இந்த காஷ்மோரா திரைப்படம் பாகுபலி ரிலீசுக்கு முன்னால் வந்திருந்தால் இந்தியாவிலேயே மிக முக்கியமான பெருமைமிக்க படமாக இருந்திருக்கும் என்று விவேக்கே மேடையில் பேசினார்.
அப்போது தான் நயன்தாரா பற்றி பேச ஆரம்பித்தார். காஷ்மோராவில் நயன்தாரா ஒரு இளவரசியாக வருகிறார். படத்தில் அப்படி வந்தவர் படத்தின் புரமோஷன்களுக்கு வரவே இல்லை.
நயன் நடிக்கிற எந்தப் படத்தின் புரமோஷனுக்கும் வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிற நிலையில் ஏன் நயன் தாரா புரமோஷன்களுக்கு வருவதில்லை என்கிற காரணத்தை அவர்கள் வாயால் சொன்னதை தன் வாயால் சொன்னார் விவேக்.
சமீபகாலமா கதாநாயகிகள் தாங்கள் நடிக்கிற படத்தோட புரமோஷன்களுக்கு வருவதில்லை. இது எனக்குத் தெரியும்.
இந்தப் படத்துல நயன்தாரா நடிச்சிருக்காங்க. ஆனால் படத்தோட புரமோஷனுக்கு வரவேயில்லை. ஏன் புரமோஷன்களுக்கு வர்றதில்லேன்னு கேட்டேன். அதுக்கு அவர் க்யூட்டா ஒரு பதிலைச் சொன்னாங்க.
அதாவது நான் நடிச்ச படத்தோட புரமோஷனுக்கு வந்து கலந்துகிட்ட அந்தப்படம் ஹிட் ஆக மாட்டேங்குது. அதனால தான் வருவதில்லை என்றாராம் நயன்தாரா. எல்லா நடிகைகளுக்கும் புரமோஷன்களில் இருந்து தப்பிக்கிறதுக்கு இப்படி ஒரு பதிலை வெச்சிருங்காங்க. அவங்களுக்கெல்லாம் நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். அப்படியே நயன் தாரா இன்னொன்னையும் செஞ்சா தயாரிப்பாளர்கள் நல்லா இருப்பாங்க. அது என்னன்னா நான் நடிக்கிற படங்கள்ல கடைசி செட்டில்மெண்ட் பணத்தை வாங்க மாட்டேன்னு சொல்லிட்டா அந்த செண்டிமெண்ட்ல தயாரிப்பாளர்களும் ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்றார் விவேக்.
சரி விவேக் நயனை போட்டு இப்படி வெளுத்து வாங்க என்ன காரணம்?
ரொம்ப சிம்பிள் படத்துல நயன் தாரா காம்பினேஷன்ல விவேக்குக்கு ஒரு சீன் கூட இல்லையாம்!
இருந்தாலும் விவேக் சொன்னது உண்மை தாங்க…