கமலின் ‘பாபநாசம்’ படத்தால் என்னுடைய படம் நாசமானது! – விவேக் வேதனை

மெரிக்க தமிழர்கள் இணைந்து முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டிருக்கும் படம் ‘வெள்ளைப்பூக்கள்’.

அறிமுக இயக்குனர் விவேக் இளங்கோவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விவேக், சார்லி, பூஜா தேவரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தைப் பற்றி பேசிய நகைச்சுவை நடிகர் விவேக் தான் ஹீரோவாக நடித்த ‘நான் தான் பாலா’ சரியாகப் போகாமல் நாசமாகப் போனதுக்கு கமல் படம் தான் காரணம் என்று வேதனையோடு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, ”40 வருடங்களுக்கு முன்பு மகேந்திரன் இயக்கத்தில் ‘உதிரிப்பூக்கள்’ படம் வெளியாகி எப்படி புதிய ட்ரெண்டை உருவாக்கியதோ அதேபோல் ‘வெள்ளைப்பூக்கள்’ படமும் புதிய ட்ரெண்டை உருவாக்கும். இந்தப் படத்தில் சார்லி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்குள் எப்போதும் ஒரு பண்பட்ட குணச்சித்திர நடிகர் இருக்கிறார். ஆனால் அவரை எல்லோரும் காமெடியனாகவே பயன்படுத்தினார்கள்.

பொதுவாக நான் காமெடியனாக நடிக்கும் படங்கள் ஹிட் ஆகிவிடும். நான் காமெடியாக வந்த பல அறிமுக நடிகர்களின் படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு மட்டும் ஏதாவது பிரச்னை வந்துவிடுகிறது.

நான் இதுவரை நடித்த படங்களிலேயே சிறந்த படம் என்று ‘நான் தான் பாலா’ படத்தைச் சொல்லலாம். ஆனால் அந்தப் படம் ரிலீஸான சமயத்தில் கமலின் ‘பாபநாசம்’ படம் வெளியானதால் என்னுடைய படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் என்னுடைய படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் நாசமாகி விட்டது.

இந்தப் படத்திற்காக என்னிடம் நடிக்கக் கேட்டபோது கூட இப்படி ஒரு பிரச்சனை இருந்ததை சொன்னபோது கண்டிப்பாக இந்தப்படத்துக்கு தியேட்டர்கள் பிரச்சனை இல்லை. எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைத்திருக்கின்றன என்று தயாரிப்பாளர் சொன்னார். அந்த வகையில் இந்தப்படம் தமிழ்சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டர் படமாக அமையும்” என்றார் விவேக்.

Press MeetVellai PookalVivekVivek Speech
Comments (0)
Add Comment