சமூக அக்கறை உள்ள நடிகர் – முதலிடம் யாருக்கு தெரியுமா?

மிழ்நாட்டில் சினிமாவையும், அரசியலையும் பிரிக்கவே முடியாது. ஏனென்றால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு மட்டும் தான் எல்லா முதல்வர்களும் சினிமாவிலிருந்தே வந்திருக்கிறார்கள்.

இப்போதும் கூட ரஜினி, கமல், விஷால், விஜய் என அடுத்தடுத்த மாஸ் ஹீரோக்கள் அரசியலை நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

அப்படி அரசியலுக்கு வர ஆசைப்படுகிற நடிகர்களில் யாருக்கு சமூக அக்கறை அதிகம் இருக்கிறது என்பதும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய ஒன்று தானே?

அந்த வகையில் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் சமூக அக்கறை கொண்ட நடிகர்கள் யார்? என்றொரு கேள்வி கேட்கப்பட்டது.

அதில் 18% வாக்குகள் பெற்று விஜய் முதலிடத்தில் உள்ளார், இரண்டாவது இடத்தில் 14% வாக்குகளுடன் விஷால் உள்ளார். 9% வாக்குகளுடன் ரஜினி, 8% வாக்குகளுடன் கமல், வெறும் 6% வாக்குகளை அஜித் பெற, சூர்யா, தனுஷ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ajithDhanushkamalRajinikanthSuriyavijayvishal
Comments (0)
Add Comment