அதையொட்டி நடந்த வரவேற்பு, கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வீடியோக்களில் ரஜினியின் மூத்த மருமகனும், ஐஸ்வர்யாவின் கணவருமான தனுஷை மட்டும் பார்க்க முடியவில்லை.
இதனால் தனுஷ் செளந்தர்யாவின் திருமணத்தை புறக்கணித்தாரோ? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் உண்மையில் செளந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெற்றிமாறனின் ‘அசுரன்’ பட கெட்டப்பில் வந்து கலந்து கொண்டிருக்கிறார் தனுஷ்.
அப்போது திடீரென்று திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதை விட்டுவிட்டு, தனுஷை மொய்த்துக் கொண்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத தனுஷ், அதை தவிர்ப்பதற்காக வரவேற்பு நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து வெளியேறி அதே ஹோட்டலில் உள்ள அறை ஒன்றுக்கு சென்று விட்டார். நிகழ்ச்சி முடியும் தருவாயில் தான் மீண்டும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
அதனால் செளந்தர்யா திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தனுஷ் இடம்பெறவில்லையாம்.