நடிகர் சங்கப் போராட்டத்தை அஜீத் புறக்கணித்தது ஏன்? – வெளிவராத தகவல்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் விஷவாயு தொழிற்சாலையை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் மவுன அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

காலை 9 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஃபெப்சி தொழிலாளர்கள் என ஒட்டு மொத்த திரையுலகினரும் கலந்து கொண்டனர்.

ஆனால், அஜித், சிம்பு, அர்ஜுன், பிரகாஷ்ராஜ், அதர்வா, மோகன் போன்ற நடிகர்களும், நயன்தாரா, ஹன்சிகா, த்ரிஷா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகளும் பங்கேற்கவில்லை.

அர்ஜுன், பிரகாஷ் ராஜ், அதர்வா, ‘மைக்’ மோகன் போன்ற நடிகர்கள் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அதனால், கர்நாடகாவுக்கு எதிராக நடக்கும் எந்தப் போராட்டத்திலும் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள். சிம்புவைப் பொறுத்தவரை தனக்கு அழைப்பு வரவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால் ‘எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை’ என்கிற கொள்கையோடு இருந்தாலும் இது போன்ற உணர்வுப் பூர்வமான நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதை தவிர்க்க மாட்டார் அஜீத். இலங்கை தமிழர்களுக்காகவும், ஜல்லிக்கட்டுக்காகவும் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற அஜீத், இந்த காவிரி, ஸ்டெர்லைட் சம்பந்தப்பட்ட போராட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்பார் என்றே எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், போராட்டம் முடியும் நேரமான 1 மணி வரை எல்லோரும் அஜீத் வருவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் வரவில்லை. இதனால் அஜீத் ரசிகர்கள் சிலரே அவருக்கு எதிராக கருத்துகளை சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்கள்.

சரி உண்மையில் ஏன் அஜீத் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று விசாரித்த போது நடிகர் சங்கத்தின் நடவடிக்கைகளை கை காட்டுகிறார்கள்.

விஷால் தலைமையிலான அணி ஜெயித்து நடிகர் சங்கத்தில் பதவிக்கு வந்த பிறகு அவர்கள் செயல்பாடுகளில் அஜீத்துக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக நேற்று நடிகர் சங்கம் நடத்திய இந்தப் போராட்ட முறையில் அஜீத்துக்கு சுத்தமாக உடன்பாடு இல்லையாம்.

எப்போதுமே வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்கள் மத்தியில் முகத்தைக் காட்ட யோசிக்கும் அஜீத் போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடத்த முடிவு செய்ததில் உடன்பாடு இல்லையாம். ஒருவேளை போராட்டத்தை நடிகர் சங்க வளாகத்தில் நடத்தியிருந்தால் ரசிகர்கள் தொந்தரவு இருக்காது, அதில் கட்டாயம் கலந்து கொண்டிருப்பார் என்கிறார்கள்.

அதேபோல போராட்டம் எந்த வடிவிலான போராட்டமாக இருக்கும் என்பதையே முடிவு செய்யாமல் திடீரென்று போராட்ட தேதியை அறிவித்ததும் அஜீத்துக்கு சரியாகப்படவில்லையாம். அதனால் தான் இந்தப் போராட்ட்டத்தை அஜீத் புறக்கணித்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

cauvery protestNadigar SangamNadigar Sangam ProtestSterlite ProtestSuriyavijayvishal
Comments (0)
Add Comment