பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர் ஜே ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘வுல்ஃப்’ படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளது.
வுல்ஃப் படத்தின் இசையை அம்ரேஷ் கணேஷ், ஒளிப்பதிவை அருள் வின்சென்ட், படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர், கலைத் துறையை மணிமொழியன் ராமதுரை ஆகியோர் கவனிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Actor Prabhudevawolf movie