நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “எமகாதகி”. வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் பேசியதாவது…
எமகாதகி எங்களுக்கு மிகவும் முக்கியமான படைப்பு. இப்படம் முழுமையாக வந்ததற்கு இம்மேடையில் இருப்பவர்கள் தான் காரணம், அதே போல் இப்படம் மக்களிடம் சென்று சேர்ந்ததற்குப் பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான் காரணம். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். ராகுல் மற்றும் ஸ்ரீனிவாசராவ் சார் இருவரிடமும் இந்த கதையை ஒரு ஐடியாவாக தான் சொன்னேன், அவர்கள் உடனே இதை டெவலப் செய்யுங்கள் கண்டிப்பாகச் செய்யலாம் என்றனர், பின் ஒளிப்பதிவாளர் சுஜித்திடம் இதே கதையைச் சொன்ன போது, அவரும் ஊக்கம் தந்தார். இப்படித்தான் இந்த திரைப்படம் ஆரம்பமானது. சுஜித் நட்பு ரீதியாக மிக நெருங்கிய பழக்கம், அவர் பெரிய பட்ஜெட் படங்கள் செய்து தன்னை நிரூபித்து விட்டார், எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால் மிகவும் ஊக்கம் தந்தார், இப்போது வரை அவர் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. பல காட்சிகளை எப்படி எடுக்கப் போகிறேன் எனப் பயந்தேன். சுஜித் அதை மிகச்சுலபமாகச் சாதித்து விட்டார். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள், 36 குடும்பங்களாகப் பிரித்து வைத்துத் தான் வேலை பார்த்தோம் அனைவரும் மிகப்பெரும் ஒத்துழைப்புத் தந்தனர். எடிட்டிங்கில் ஸ்ரீஜித் சாரங் பல ஆச்சரியங்களைச் செய்து காட்டினார். இசையமைப்பாளர் ஜெசின் மிக அட்டகாசமாகச் செய்துள்ளார். அவருக்கு நன்றி. சவுண்டில் மிரட்டிய சச்சின், அரவிந்த் இருவருக்கும் நன்றி. உங்களுக்குத் திரையிட்டவுடனே இப்படத்தின் தலையெழுத்து மாறிவிட்டது. நீங்கள் தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி. நல்ல படங்களைத் தொடர்ந்து தருவேன் நன்றி.
நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிட்டுள்ளது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். “எமகாதகி” கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்துக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.
துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம், படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான Sync Cinema, ஒலி வடிவமைப்பைச் செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
மார்ச் 7 ஆம் தேதி வெளியான “எமகாதகி” திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.