ஆனால் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான யாஷிகா ஆனந்த் கிடைத்த புகழை சரியான முறையில் அறுவடை செய்யாமல் வந்த வரைக்கும் லாபம் என்று படங்களை கமிட் செய்கிறார். அதில் ஒன்று தான் யோகிபாபு ஹீரோவாக நடித்து வரும் புதுப்படம்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத விநாயக் சிவா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கும் படமொன்று அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் தான் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் யாஷிகா ஆனந்த். அவரோடு படத்தில் நிக்கி தம்போலி என்ற இன்னொரு நாயகியும் இணைந்து நடிக்கிறாராம்.
ரஜினிகாந்தின் 2.0 படத்தில் பணியாற்றிய பிரபலமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் பணியாற்ற உள்ள இப்படம் 3Dயில் படம் பிடிமாக்கப்படுவதால் தமிழில் தயாராகும் முதல் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ திரைப்படம் என்ற பெருமையும் கிடைக்குமாம். படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஜனவரி மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.