ஆர்யாவைப் கதாநாயகிகளுக்குப் பிடிக்க என்ன காரணம் என்று ஒரு பட விழாவில் விவாதிக்கப்பட்டது. யுடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் யட்சன்.
ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். ‘யட்சன்’ என்றால் குபேரன், இயக்குபவன் என்று பொருளாம். இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் ஆர்யாவை மட்டும் ஹீரோயின்கள் ஏன் சுத்தி சுத்தி வருகிறார்கள் என்பதற்கான காரணம் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது.
முன்னதாக விழாவில் பேசிய இயக்குநர் விஷ்ணுவர்தன் “இது ‘ஆரம்பம்’ படத்துக்கு முன்பே பேசப்பட்ட ஒரு விஷயம். ஆனந்த விகடனில் வந்த சுபா அவர்களின் தொடர்கதை படமாக தயாராகியுள்ளது. படத்தின் பாடல்களும்வரவேற்பைப் பெற்றுள்ளன. கம்போசிங், பாட்டு என்று நாங்கள் வெளிநாடு எல்லாம் போய் சிரமப்படவில்லை.
தி.நகரிலுள்ள ஒரே ரூமில்தான் பாடல்களை உருவாக்கினோம்.யுவன் என் ஆரம்பகாலம் முதல் என்னுடன் பெரியபலமாக தொடர்பவர். நீ எத்தனை ஆல்பம் போட்டாலும் எனக்கு தனியா போட வேண்டும் என்று உரிமையோடு கேட்கிற நட்பு எங்களுடையது.
ஆர்யாவுடன் இது எனக்கு ஐந்தாவது வது படம். ஆர்யா என் ஹீரோ. அவரைப் பார்த்தாலே எதுவும் கேட்க வேண்டாம். கதையும் சொல்ல வேண்டாம். எப்ப மச்சான் ஷூட்டிங் போகலாம் என்பவர் .அவருடன் என் தம்பி கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார். நான் எப்போ படம் தொடங்கினாலும் என் அம்மா உன் தம்பியையும் நடிக்க வைப்பா என்பார்கள்.
அவருக்கு ஏற்றமாதிரி கதை அமைந்ததால் இதில் நடிக்க வைத்திருக்கிறேன். ஆர்யா-கிருஷ்ணா இரண்டு பேரையும் நடிக்க வைக்க படாதபாடு பட்டேன். என்றார்.
பின்னர் பேசிய பாடலாசிரியர் பா. விஜய் “நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணைந்திருக்கும் இது எட்டாவது படம். அதிலும் எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளேன். எங்கள் 3 பேரிடம் அப்படி ஒரு நட்பு, புரிதல் உள்ளது. இவர்களுக்கு எழுதும் போது மட்டும் பாடல் எழுதும் மன நிலையில் நான் போனதில்லை.
நண்பர்களைப் பார்ப்பது போல போவேன். இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது. ஆர்யாவை ஏன் எல்லாப் பெண்களும் கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா? இதுவரை தெரியாது,இப்போது புரிகிறது. நட்புக்குஅவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர் என்றார்.
ஆர்யா பேசும்போது “என்னை நடிக்க வைத்து யுடிவியில் பல படங்கள் எடுத்த போதும் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள். விஷ்ணுவர்தனிடம் நான் கதை கேட்பதில்லை. அவர் சொல்ல ஆரம்பித்தால் ஆறேழு மணிநேரம் போகும். ஆறேழு மணிநேரம் கதை சொல்வார். அவருடைய பொறுப்பை விடமாட்டார் எனவே நான் கதை கேட்பதில்லை என்றார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சுபா, நடிகை தீபா சன்னதி, ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் தயாரிப்பாளர் யுடிவி ஜி.தனஞ்ஜெயன் ஆகியோரும் பேசினார்கள். ஆடியோ சிடியை எழுத்தாளர்கள் சுபா வெளியிட யுவன் சங்கர்ராஜா பெற்றுக் கொண்டார்.