‘மாப்ள சிங்கம்’ படத்துக்காக அனிருத்துடன் இணைந்து பாடிய சிவகார்த்திகேயன்!
தயாரிப்பாக இருந்தாலும் சரி, விநியோகமாக இருந்தாலும் சரி ரசிகர்களின் ரசனைக்கேற்ற படங்களை தந்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிதாக தயாரித்து வரும் படம் தான் ‘மாப்ள சிங்கம்.’
விமல், அஞ்சலி, சூரி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். என். ஆர். ரகுநந்தன் இசையமைப்பில் படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது.
மேலும் படத்தின் பிரமோஷனுக்காக ‘எதுக்கு மச்சான் காதலு…’ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர்.
மாப்ள சிங்கம் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் தனது நண்பன் விமலுக்காக ‘மாப்ள சிங்கம்’ படத்தில் பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.