‘சிக்ஸர்’ படத்துக்காக ராப் பாடிய அனிருத்

Get real time updates directly on you device, subscribe now.

வைபவ், பாலக் லால்வானி நடிப்பில் தயாராகி வரும் படம் ‘சிக்ஸர்’.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்காக துள்ளலான ராப் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

ஏற்கனவே இதே படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் லவ் கானா பாடல் ஒன்றை பாடிக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து தற்போது அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

இதுகுறித்து ஜிப்ரானிடம் கேட்டபோது, “இது எனக்கு ஒரு புதிய மற்றும் புதுமையான அனுபவம். அனிருத் தமிழ்சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த போதிலும், நாங்கள் கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் வந்து இந்தப்பாடலை பாடிக் கொடுத்தார். இது குழுவில் உள்ள எங்களுக்கு மட்டுமல்லாமல், பாடலை கேட்கும் அனைவருக்கும் அற்புதமான ஒன்றாக இருக்கும் என நான் உறுதியாக இருக்கிறேன்.” என்றார்.

சாச்சி எழுதி இயக்கியுள்ள இந்த படத்துக்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.