‘ஆன்ட்டி’ அனுஷ்கா : பறிபோகும் பட வாய்ப்புகள்
யோகா டீச்சராவே இருந்தாலும் மேனி அழகை எத்தனை வருடங்களுக்குத் தான் கட்டிக்காக்க முடியும்?
அதனால் தான் அனுஷ்காவின் வீட்டில் அப்பாவும், அம்மாவும் திருமணம் செய்துகொள்ளும் படி டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அனுஷ்காவோ இளமை இருக்கும் வரை சம்பாதிப்பது என்கிற கொள்கை முடிவோடு திருமணத்தை தள்ளி போட்டுக்கொண்டே போகிறார்.
என்னதான் திருமணத்தை தள்ளிப்போட்டு வாய்ப்பு வேட்டையாடினாலும் அவருக்கு வயதாகிக் கொண்டே போவதால் அவரை புறக்கணிக்கும் வேலையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
சமீபத்தில் நடந்த சம்பவம் இது!
ஸ்ரீமந்துடு படத்தின் மெகாஹிட் வெற்றியைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் புதுப்படம் ‘பிரம்மோற்சவம்’. பி.வி.பி.சினிமாஸ் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக முதலில் அனுஷ்காவைத் தான் கமிட் செய்தார்கள். ஆனால் இப்போது திடீரென்று அந்த இடத்தில் சமந்தா இருக்கிறார்.
என்ன நடந்தது?
மகேஷ்பாபுவையும், அனுஷ்காவையும் வைத்து ஒரு போட்டோஷூட் நடத்திப் பார்த்திருக்கிறார்கள். மகேஷ்பாபுவை விட அனுஷ்கா வயது முதிர்ந்தவராகவும், ‘ஆன்ட்டி’ மாதிரியும் இருந்தாராம்.
அதனால் தான் அந்த இடத்தில் இப்போது சமந்தா வந்திருக்கிறார்.
யோசிக்காம திருமணத்துக்கு தயார் ஆகிடுங்க யோகா டீச்சர்…