‘அரண்மனை’யின் வசூல் சாதனையை முறியடித்த ‘அரண்மனை 2’!!
சலிக்க சலிக்க பேய்ப்படங்கள் கோடம்பாக்கத்தில் அணிவகுத்து வந்தாலும் சில படங்களின் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுக்கிற ஆதரவு என்பது ஆச்சரியம் தான்.
அப்படி ஒரு அதிசயத்தை தான் நிகழ்த்தியிருக்கிறது சுந்தர்.சியின் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசான ‘அரண்மனை 2’ திரைப்படம்.
‘அரண்மனை’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று பிரம்மாணடமான வெற்றி பெற்றுள்ள திரைப்படமான ‘அரண்மனை 2’ திரைப்படம் ‘அரண்மனை’ பாகம் ஒன்றின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாம்.
படம் ரிலீசான மூன்றே நாட்களில் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் படம் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்துள்ளது.
பெண்கள் , குழந்தைகள் மற்றும் அனைவரையும் கவர்ந்துள்ள இப்படம் பி , சி என அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மூன்றே நாட்களில் அரண்மனை2 1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.