மீண்டும் காவல்துறை அதிகாரியாக அவதாரமெடுக்கும் அருண் விஜய்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான ‘தடம்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதில் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார் அருண் விஜய்.
அந்த உற்சாகத்தோடு ஏற்கனவே கைவசம் இரண்டு படங்களை வைத்திருக்கும் அவர் இன்னொரு புதுப்படத்தில் நடிக்க ஆயத்தமாகி விட்டார்.
இயக்குநர்கள் கண்ணன், மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் இப்படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
கட்டுக்கோப்பான உடலமைப்பு தான் இப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்கத் தூண்டுகிறதா என்று கேட்டால் “நான் அப்படி நினைக்கவில்லை. ‘குற்றம் 23’ படத்தில் கூட நான் உடலை காட்டுவதோ, அல்லது அதிரடியான சண்டைக்காட்சிகளிலோ அதிகம் நடிக்கவில்லை. அது முழுக்க முழுக்க புத்திசாலித்தனம் சம்பந்தப்பட்ட ஒரு படம். அதே மாதிரி இந்தப் படத்தின் கதையை இயக்குனர் கோபிநாத் என்னிடம் சொன்னபோது, அது பல திருப்பங்களை கொண்டிருந்தது” என்றார்.
‘குற்றம் 23’ படத்துக்கும் மற்றும் இந்த படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ‘குற்றம் 23’ படம் மருத்துவ துறையை மையமாக கொண்ட ஒரு த்ரில்லர். ஆனால் இந்த படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதையும் பற்றியது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார் சிரித்துக் கொண்டே.
ஜிம்முக்கு கொடுத்த காசு வீணாகல…