அனுஷ்கா படத்தில் உடற்பயிற்சியாளரான ஆர்யா!

Get real time updates directly on you device, subscribe now.

anushka

நான் ஈ உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பி.வி.பி சினிமா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் படம் ‘ இஞ்சி இடுப்பழகி’.

தீவிர உடற்பயற்சியாளர் என எல்லோராலும் போற்றப்படும் ஆர்யா இந்தப் படத்தில் உடற்பயற்சி நிபுணராகவே தோன்றுகிறார்.

மெல்லிய உடலுக்கான தேடலில் இன்றைய மென்பொருள் சமூகம் எப்படி பாடுபடுகின்றது என்பதை நகைசுவையுடன் கூற வருகிறது ‘ இஞ்சி இடுப்பழகி’.

படத்தின் கதைக்கு தேவைப்பட்ட முக்கியமான உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆர்யாவே பகிர்ந்துக் கொள்கிறார். சமீபத்தில் சர்வதேச மிதிவண்டி பந்தயத்தில் ஆர்யாவின் வெற்றியால் ரசிகர்களது கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள ‘சைக்கிளிங்’ இப்படத்தில் முக்கியமான பங்கு வகிக்கவுள்ளது.

காதல் மற்றும் நகைசுவை கலந்த திரைப்படமாக உருவாகி வரும் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, மரகதமணி இசையில் பழம்பெரும் இயக்குனர் கே. ராகவேந்திரராவ் அவர்களின் மகன் கே.எஸ். பிரகாஷ் இயக்குகிறார்.