‘அஸ்திரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் , நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘அஸ்திரம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். கதாநாயகியாக மாடலிங் துறையைச் சேர்ந்த நிரஞ்சனி நடிக்க, முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
‘ஐரா’, ‘எட்டு தோட்டாக்கள்’, ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி ‘அஸ்திரம்’ படத்திற்கு இசையமைக்கிறார்.விரைவில் வெளியாக உள்ள ‘ரேஞ்சர்’, ‘ஜாக்சன் துரை 2’ படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய,
‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப்போற்று’ படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இப்படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.கலை வடிவமைப்பை ராஜவேல் கவனிக்க, சண்டைப் பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார். இன்று இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வம்சி நடிகர்கள் கிச்சா சுதீப், ஆர்யா, சாயேஷா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் வெளியிட்டனர்.கடந்த பத்து வருடங்களாக குறும்படங்களில் நடித்து, பின்னர் ‘என் பெயர் ஆனந்தன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அனுபவம் பெற்றவர் இப்படத்தின் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.