அயோத்தி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

மனிதம் மட்டுமே உலகில் சிறந்த புனிதம் எனச் சொல்கிறது அயோத்தி

ராமேஸ்வரம் செல்வதற்காக ஒரு குடும்பம் அயோத்தியில் இருந்து வருகிறது. வரும்போது அந்தக்குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்துவிடுகிறார். அவர் உடலை அப்படியே காசிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என விரும்புகிறது அக்குடும்பம். அந்த குடும்பத்திற்கு உதவுவதற்காக அங்கு செல்கிறார் சசிகுமார். அதில் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் வந்தன? சசிகுமார் அவற்றை எப்படியெல்லாம் சமாளித்தார்? என்பதே படத்தின் கதை

ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு என்றாலும் பல இடங்களில் தான் பேசும் வசனங்களால் ஈர்க்கிறார் சசிகுமார். சசிகுமார் என்றில்லை. குடும்பத்தலைவரின் மகளாக நடித்தவரின் நடிப்பும்,காமெடி செய்யாத புகழின் நடிப்பும், கல்லூரி வினோத்தின் நடிப்பும் அட்டகாசம். மேலும் அந்தக் குடும்பத்தின் தலைவராக நடித்துள்ளவரின் நடிப்பிலும் அத்தனை துல்லியம் நேர்த்தி. ஏனைய கேரக்டர்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன

ஒரு டிபரண்டான லைன் என்பதால் இசைவழியே தன்னால் ஆன பாசிட்டிவ் அம்சங்களை எல்லாம் இசை அமைப்பாளர் செய்துள்ளார். ஒளிப்பதிவாளரும் தனது பணியை சிறப்பாகச் செய்துள்ளார்.

அயோத்தி என்ற டைட்டிலை வைத்ததும் பெரும் அரசியல் பேசப்பட்டிருக்கும் என்று நினைத்தால் படம் பேரன்பை பேசியிருக்கிறது. கமர்சியல் சமரசங்கள் சிலவற்றைத் தவிர்த்திருந்தால் இந்த அயோத்தி தமிழ்சினிமாவில் மிக முக்கியமான படமாக இருந்திருக்கும். இருப்பினும் இது முக்கியமான படமென்பதில் மாற்று கருத்தில்லை
3.75/5