‘டிவி சேனல்’ ஆரம்பித்தார் சீயான் விக்ரம்!

Get real time updates directly on you device, subscribe now.

chiyaan-vikram

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா இருவரும் இணைந்து துவங்கியுள்ள ‘பிக் டீல் டிவி’ கடந்த 2 மாதங்களாக ஹிந்தியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

24/7 மணிநேர வீட்டு உபயோக பொருட்கள் விற்கப்படும் தொலைக்காட்சி சேனலான இந்தச் சேனல் தற்போது தமிழ்நாட்டிலும் தமிழில் வருகிற 18-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது.

தமிழ் சேனலில் அக்‌ஷய்குமார், ராஜ்குந்த்ரா ஆகியோருடன் நடிகர் விக்ரம் பங்குதாரராகவும், பிராண்ட் அம்பாசிடராகவும் இணைந்துள்ளார்.

Related Posts
1 of 20

கேபிள் டிவி மட்டுமில்லாமல் எல்லா டி.டி.ஹெச்சிலும் தமிழகம் முழுவதும் பார்க்கக் கூடிய இந்த சேனலில் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், உடை, உடல் நலம் மற்றும் அழகுசாதன பொருட்கள், மொபைல் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். இந்த டி.வி.யில் நம்பகத்தன்மையான, கியாரண்டியான பொருட்கள் மட்டும் தான் விற்கப்படுமாம்.

இது குறித்து நடிகர் விக்ரம் கூறும்போது, ‘‘முதல் முறையாக பிரபலங்களால் இயக்கப்படும் 24/7 மணிநேர ஹோம் ஷாப்பிங் தொலைக்காட்சி சேனலான ‘பிக் டீல் டிவி’யை தமிழகத்தில் அறிமுகம் செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

இது ஒரு வித்தியாசமான முயற்சி. எனது ஒப்புதலின் பேரிலேயே இந்த சேனலில் பொருட்கள் விற்கப்படும். மேலும் இச்சேனலில் வாடிக்கையாளர்களின் சேவையை அறிந்து கொண்டு மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வோம். ‘பிக் டீல் டிவி’ மூலம் உங்களுக்கு கிடைப்பது பெஸ்ட் பொருட்களாகத்தான் இருக்கும்’’ என்று உறுதியளித்தார் விக்ரம்.