பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனன் லவ் : கத்திரிக்கா முத்தியாச்சு..! கடைத்தெருவுக்கு வந்தாச்சு…!!

Get real time updates directly on you device, subscribe now.

reshmi

ந்த நடிகர், நடிகைகளும் தங்கள் நிஜக் காதலை அவ்வளவு சீக்கிரத்தில் வெளியில சொல்ல மாட்டார்கள். மீறி மீடியாக்களே கண்டுபிடித்தாலும் கூட ‘அதெல்லாம் சும்மா…’ என்று அப்பட்டமாக பொய் சொல்வார்கள்.

அப்படித்தான் தனது காதல் சமாச்சாரத்தையும் மூடி மறைத்தார் நடிகர் பாபி சிம்ஹா.

சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வரும் ‘உறுமீன்’ படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடி ரேஷ்மிமேனன் தான். படத்தில் காதலித்தது போக நிஜத்திலும் இருவருமே காதலில் திளைத்திருக்கிறார்கள்.

இந்த காதல் விவகாரம் தெரிந்ததும் ரேஷ்மிமேனன் வீட்டார் கொதித்து விட்டார்கள். கடைசியில் ‘ஜிகர்தண்டா’ பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் தனது படை பரிவாரங்களோடு ரேஷ்மி வீட்டாரை சந்தித்து ”பாபி ரொம்ப நல்ல பையன் உங்க பொண்ணை கண் கலங்காம பார்த்துக்குவாப்ல” என்று சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார்கள்.

Related Posts
1 of 8

bobby

இந்த விஷயம் மீடியாக்களில் கசியவும் இன்றுவரை அதை பொய் என்று சொல்லி வருகிறார் பாபி. ஆனால் ரேஸ்மியோ காதல் சமாச்சாரத்தை மறுக்கவே இல்லை.

இதற்கிடையே பாபி சிம்ஹா – ரேஷ்மிமேனன் இருவரது காதலுக்கும் அவர்களது வீட்டில் க்ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் அடுத்த மாதம் நிச்சயதார்த்தமும், வரும் புத்தாண்டில் திருமணம் நடைபெற இருக்கிறதாம்.

அனேகமாக இன்னும் சில வாரங்களில் தங்கள் காதல் விவகாரத்தை பாபிசிம்ஹா – ரேஷ்மிமேனன் இருவருமே முறைப்படி மீடியாக்களுக்கு தெரிவிப்பார்கள் என்று நம்பலாம்.

மொத்ததுல ‘முத்தின கத்தரிக்கா கடைத்தெருவுக்கு வந்தாச்சு…’