லாபத்தில் ‘பங்கு’ கேட்கும் பாபி சிம்ஹா : தயாரிப்பாளர் கண்ணீர்!

Get real time updates directly on you device, subscribe now.

bobby

ஷ்டப்படும் போது கூட இருப்பவர்களிடம் உதவி கேட்பவர்கள் கையில் கொஞ்சம் காசு வந்ததும் உதவி செய்தவர்களை மறந்து விடுவார்கள்.

சினிமாவில் இப்படிப்பட்ட ஆட்கள் எக்கச்சக்கம் உண்டு.

அப்படி நன்றி மறந்த நடிகர்களில் ஒருவராகத் தான் ஆகி விட்டார் சமீபத்தில் சிறந்த நடிப்புக்காக ‘தேசிய விருது’ வாங்கிய நடிகர் பாபி சிம்ஹா.

பாபிசிம்ஹா சினிமாவில் நடிகராக முயற்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவரையும் ஒரு ஹீரோவாகப் போட்டு தயாரான படம் தான் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’.

புதியவர் எம்.மருதுபாண்டியன் தயாரித்து, இயக்கிய இப்படத்தை முடிக்கும் முன்பே தனது நண்பரும் ‘நேரம்’ படத்தின் இயக்குனருமான அல்போன்ஸ் புத்திரனிடம் பாபியின் திறமையைப் பற்றி நல்லவிதமாக நாலு வார்த்தைகளைச் சொல்லி சான்ஸ் கொடுங்களேன் என்று கேட்டிருக்கிறார்.

Related Posts
1 of 7

‘நேரம்’ படத்தில் பாபிசிம்ஹா நடித்து ரிலீசாகவும் அடுத்து ‘பீட்ஸா’வில் தொடர்ந்து இன்றைக்கு ‘உறுமீன்’, ‘பாம்புச்சட்டை’ என சோலோ ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.

காட்சிகள் மாறியதும் பாபியின் மனசும் மாறி விட்டது.

யார் மூலமாக பாபி பிக்கப் ஆனாரோ அவருடைய படத்துக்கே இப்போது டப்பிங் பேசுவதற்கு மட்டும் 25 லட்சம் ரூபாய் கேட்டு டார்ச்சர் செய்கிறாராம்.

இயக்குனர் மருதுவோ இப்போதைக்கு ”எங் கையில காசு இல்ல, படம் ரிலீசாகி கண்டிப்பா வசூல் வரும் அப்போ நீங்க கேட்ட பேமண்ட்டை தர்றேன்” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காத பாபி ”அப்படியானால் படத்துல வர்ற லாபத்தில் எனக்கும் பாதியைத் தர வேண்டும்” என்று இம்சிக்கிறாராம்.

கோடம்பாக்கத்தின் பெரிய பெரிய தலைகள் கூட முன்வந்து பஞ்சாயத்து பேசியும் பிரச்சனை தீரவில்லை.

இரக்கமில்லாமல் பணம் கேட்கும் நண்பனால் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ இயக்குனர் எம்.மருது பாண்டியன்.