தமிழ்சினிமாவுக்கு வரும் ‘உயர்ந்த மனிதன்’ அமிதாப்பச்சன்!

Get real time updates directly on you device, subscribe now.

ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாரான பிரபல நடிகர் அமிதாப் பச்சன் முதல் முறையாக நேரடித் தமிழ்ப்படத்தில் அறிமுகமாகிறார்.

கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ் வாணன் இயக்கும் இப்படத்துக்கு “உயர்ந்த மனிதன் ” என்று டைட்டில் வைத்துள்ளனர்.

எஸ்.ஜே.சூர்யாவும் அமிதாப்புடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். படத்தை திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் பைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட உள்ளது.

Related Posts
1 of 10

இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் தமிழ்வாணன் “எனது கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று, இந்திய திரை உலகின் முடி சூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணிபுரிவது பெரிய பாக்கியம்.  தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் தான் என்பதே எனக்கு மிகப்பெரிய பெருமை” என்று நெகிழ்ந்தார்.

“ஒரு துணை இயக்குனராக திரையுலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து  நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்” என்றார் எஸ் ஜே சூர்யா.

இப்படத்தில் நடிப்பதற்காக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் அமிதாப்பச்சன். மார்ச் 2019 இல்  படப்பிடிப்பு துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.