என் போன்றவர்களுக்கு ஜெ., ஒரு சகாப்தம் : விக்ரம் புகழஞ்சலி

Get real time updates directly on you device, subscribe now.

vikram

நேற்று முன் தினம் டிசம்பர் 5ம் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

அதையொட்டி நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

அதில் படப்பிடிப்புக்காக அமெரிக்கா போன நடிகர் கமல் ட்விட்டர் மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார். அதேபோல பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித் இரங்கல் அறிக்கை வெளியிட்டதோடு, உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு வந்து இன்று அதிகாலை 4 மணியளவில் முதல்வரை அடக்கம் செய்த இடத்திற்கு மனைவி ஷாலினியுடன் சென்று சென்று அஞ்சலி செலுத்தினார்.

Related Posts
1 of 22

இந்நிலையில் இவர்களைப் போலவே படப்பிடிப்புக்காக நியூயார்க் சென்றிருக்கும் நடிகர் விக்ரம் அங்கிருந்தபடியே முதல்வரின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது : ‘‘முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், வேதனை அடைந்தேன்! அரசியலில் திறமை மிக்க ஒரு தலைவியாக திகழ்ந்து வந்த அவரது மறைவு என்னைப் போன்ற லட்சக்கணக்கானவர்களின் கண்களுக்கு சகாப்தமாகத் தெரிந்தவர்.

துணிச்சலுக்கு பெயர் பெற்ற அவரது இழப்பு தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பெரும் இழப்பாகும்! அவரது ஆத்மா சாந்தி அடைய அவருக்கு இறைவன் அருள் புரிவார்!’’ இவ்வாறு விக்ரம் குறிப்பிட்டுள்ளார்.