டாடா- விமர்சனம்
கமர்சியல் சமர் நிறைந்த தமிழ்சினிமாவில் சிறிய பட்ஜெட்டில் நல்ல கன்டென்ட் உள்ள படங்கள் வெளிவந்து வரவேற்பைப் பெறுவதென்பது சாதாரணம் அல்ல. அப்படியான சூழலில் சுழன்றடித்து வந்துள்ளது டாடா.. ஒரே வரியில் சொல்வதென்றால் நல்ல படம்.
இளம் வயதிலே காதல் வயப்பட்ட ஜோடி கவின் அபர்ணா. இருவருக்குள்ளும் பெரியளவில் அந்நியோன்யம் இருக்கிறது. அது எந்தளவிற்கு வருகிறதென்றால் ஒரு கட்டத்தில் அபர்ணா படிக்கும் போதே வயிற்றில் குழந்தை வளரும் வரை செல்கிறது. இந்நிலையில் இருவருக்கும் முறிவும் பிரிவும் வர, இருவரும் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே படத்தின் கதை
கவின் தானொரு மிகச்சிறந்த நடிகர் என நிரூபணம் செய்துள்ளார். ஒவ்வொரு ஷாட்களிலும் கதையை உணர்ந்து நடித்துள்ளார் என்பதை உணர முடிகிறது. அபர்ணா நடிப்பும் அற்புதம். இவர்கள் இருவர் போலவே படத்தில் நோட்டிஸ் செய்யும் கேரக்டர்கள் நிறைய இருக்கிறார்கள். அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். அதற்கான பெருமை இயக்குநரைத் தான் சேரும். ஏனென்றால் ஒவ்வொரு கேரக்டர்களுக்கான ரைட்டிங்கிலும் அத்தனை துல்லியம்
கதை டிமாண்ட் செய்துள்ள இசையை வழங்கியுள்ளார் இசை அமைப்பாளர். மேலும் ஒளிப்பதிவாளரும் தன் பணியில் குறை வைக்கவில்லை.
ஒவ்வொரு சீக்வென்ஸிலும் ஒரு நச் டச் வைத்து திரைக்கதையில் அசத்தியுள்ளார் இயக்குநர். தெரிந்த முடிவாக இருந்தாலும் அதை தெரிய வைக்கும் வரை நம்மை என்கேஜிங்காக வைத்துள்ளார். சிறப்பான படத்தில் சிறு குறைகள் இருப்பினும் சிறப்பாக வரவேற்க வேண்டியது நம் கடமை. டாடாவை வரவேற்போம்
4/5