டியர்- விமர்சனம்
குறட்டை என்ற கான்செப்டை வைத்து மற்றொரு படம்
Good night சொன்னபின் அந்த நைட் bad night ஆக மாறினால் ஹீரோ என்னாவார்? என்பதாக ஒன்லைன் பிடித்துள்ளார் இயக்குநர். யெஸ் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குறட்டைப் பிரச்சனை. அவரின் கணவர் ஜிவி பிரகாஷுக்கு சின்ன சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து விழித்திடும் பிரச்சனை. மேலும் ஜிவி குடும்பத்திற்குள் சில பிரச்சனைகள். மொத்தப் பிரச்சனைகளோடு சேர்ந்து முடிவில் படம் எப்படியான பிரச்சனையை கொடுத்து என்னமாதிரியான முடிவை எட்டுகிறது என்பதே டியரின் கதை
ஜிவி அசால்டாக நடித்துத் தள்ளும் வழக்கமான கேரக்டர் என்பதால் இயல்பாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷை இப்படியான கேரக்டரில் பார்த்துள்ளோம் என்பதால் அவரிடமும் குறையேதுமில்லை. என்ன ஒன்று. ஜிவி ஐஸு காம்போவிற்கு கெமிஸ்ட்ரி பெரிதாக வொர்க் ஆகவில்லை. அந்தக் குறையைத் தீர்த்துள்ளது காளி வெங்கட் நந்தினி ஜோடி. இந்த ஜோடிகளுக்கான கதையும் படு ஸ்ட்ராங் என்பதால் ஜிவி ஐஸுவை விட காளி நந்துவே ஈர்க்கிறார்கள். இந்தக் கேப்-ல் ரோஹினி சிறப்பாக ஸ்கோர் செய்துவிடுகிறார்
பின்னணி இசை பெரிய அதிர்வை கொடுக்கவில்லை. ஆனாலும் குறையில்லை. ஒளிப்பதிவாளர் இடுக்கி அழகை அள்ளித் தந்துள்ளார். மற்ற இடங்களில் ஒளிப்பதிவு மூலம் திறமையைக் காட்ட படம் இடம் கொடுக்கவில்லை
பெண்களை மையப்படுத்தி நடக்கும் உளவியல் ஒடுக்குமுறையை லேசாகத் தொட்டிருக்கும் படம் அப்படியே ட்ராவல் செய்திருக்கலாம். ஏகப்பட்ட லாஜிக் பிரச்சனைகளும், படம் நேர்கோட்டில் பயணிக்கமாலும் ரசிகனை டியர் ஆக்க படம் தவறிவிட்டது. முடிவில் சில முத்தாய்ப்புகளை நிகழ்த்தி அன்பு ஒன்றே குறை தீர்க்கும் மருந்து என்ற மெசேஜை சொல்லியிருப்பதால் குறைகள் மறந்து டியர் லைக்கிடச் செய்கிறது
3/5