ரெட்டை வேஷம் போடும் தனுஷ்!
பிரபுசாலமனின் டைட்டில் வைக்கப்படாத படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்து வெற்றிமாறனின் வட சென்னை படத்துக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
இரண்டு பாகமாக தயாராகப் போகும் அந்தப்படத்துக்கிடையே எதிர்நீச்சல் இயக்குநர் துரை. செந்தில்குமாருடன் ஒரு புதிய படத்தின் இணையப் போகிறாராம் தனுஷ்.
புல் அண்ட் புல் ஆக்ஷன் படமாக வர இருக்கும் இப்படத்தில் முதல் தடவையாக டபுள் ரோலில் நடிக்கிறாராம் தனுஷ்.
ஹீரோ – வில்லன் என்றில்லாமல் அண்ணன் – தம்பியாக வருகிறாராம். தனுஷுக்கு ஜோடி மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.