அப்துல்கலாம் தனி மனிதர் அல்ல, அவர் தமிழனின் அடையாளம் : இயக்குநர் பாரதிராஜா இரங்கல்
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :
இந்தியாவின் வல்லமையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற ஒப்பற்ற தலைமகனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவருடைய மறைவு தமிழர்களுக்கும், இந்திய மாணவ சமூகத்திற்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு. அப்துல் கலாம் அவர்கள் தனி மனிதர் அல்ல.. தமிழனின் அடையாளம்.
ஆழ்ந்த வருத்தங்களுடன் பாரதிராஜா.