அஜித் போதுமாம்! : கழன்று கொள்கிறார் ‘சிறுத்தை’ சிவா
அஜித்தின் ஹிட் பட லிஸ்ட்டில் எப்போதுமே ‘வீரம்’ படத்துக்கு தனி இடமுண்டு.
அப்படிப்பட்ட பக்கா கமர்ஷியல் படத்தைக் கொடுத்தவர் ‘சிறுத்தை’ பட இயக்குநர் சிவா.
அந்த நம்பிக்கையில் தான் தனது 56-வது படமான ‘வேதாளம்’ படத்தையும் சிவாவிடமே இயக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் அஜித்.
‘வீரம்’ படப்பிடிப்பின் போது எந்த சங்கடங்களும், தடங்கல்களும் இல்லாமல் ஈஸியாக இயக்கி விட்டார் சிவா. அதே குஷி மூடில் ‘வேதாளம்’ படத்தையும் ஆரம்பித்தார்.
எப்போது படப்பிடிப்பை ஆரம்பித்தார்களோ அப்போதிலிருந்து சின்னச் சின்ன தடங்கல்கள், சங்கடங்கள் இன்ன பிற இம்சைகள். சொல்லப்போனால் ஒரு ஷெட்யூலுக்கு சிவாவே பணத்தை திரட்டி படப்பிடிப்பு நடத்தினார் என்று கூட செய்திகள் வெளிவந்தன.
அப்படி இப்படியென்று ஒருவழியாக படத்தை முடித்து போட்டுப் பார்த்தால் அஜித்துக்கு ரெண்டு லட்டு தின்ன திருப்தி. அந்தளவுக்கு படம் சூப்பராக வந்திருக்கிறதாம்.
அடுத்த நொடி சிவாவுக்கு போனைப் போட்டு மனம் திறந்து பாராட்டிய அஜித் ‘ஜி அடுத்த படமும் நாம சேர்ந்து பண்ணுவோம். ஏதாவது கதை இருந்தா சொல்லுங்களேன்…’ என்றாராம்.
‘வீர’த்தில் கிடைத்த சந்தோஷம் ‘வேதாள’த்தில் கரைந்து விட்டதால் ‘நோ ஜி எனக்கு மத்த ஹீரோக்களோடவும் சேர்ந்து படம் பண்ணனும்னு ஆசையா இருக்கு. அதனால் இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போமே’ என்று நாசுக்காக தவிர்த்து விட்டாராம்.