சாய் பல்லவியுடன் திருமணமா? – இயக்குனர் விஜய் ஓப்பன் டாக்
நடிகை அமலாபாலை பிரிந்த பிறகு படங்களை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.
பிரபுதேவாவை வைத்து ‘தேவி 2’, ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ‘வாட்ச்மேன்’ படங்கள் அவருடைய இயக்கத்தில் விரைவில் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கின்றன.
அப்படி கடமையே கண்ணாக இருக்கும் இயக்குனர் விஜய் விரைவிலேயே தனுஷின் ‘மாரி 2’ படத்தில் ‘ரெளடி பேபி’யாக மிரட்டிய சாய் பல்லவியை
இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்று கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அப்படி பரவும் செய்திகளில் துளி கூட உண்மை இல்லை என்று தெரிவித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.
மேலும் ஏற்கனவே ஒரு நடிகையை திருமணம் செய்து கசப்பான அனுபவம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் ஒரு நடிகையை திருமணம் செய்வாரா? அதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரமும் சொல்லும் செய்தி.
சாய் பல்லவி விஜய் இயக்கிய ‘கரு’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.