‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் டீசர் வெளியீடு!
’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை விட டபுள் மடங்கு ட்ரீட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர் ராமின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தன்னைச் சுற்றியுள்ள சில விஞ்ஞானிகளுடன் இருக்கும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை விவரிக்க சில மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும் வாய்ஸ் ஓவருடன் டீசர் தொடங்குகிறது. பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் உஸ்தாத் ஐஸ்மார்ட் ஷங்கர் என்ற டபுள் ஐஸ்மார்ட்டாக ராம் மீண்டும் வந்துள்ளார். இதில் காவ்யா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகை சஞ்சய் தத் பவர்ஃபுல்லான பிக் புல்லாக மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தைப் போலவே, ‘டபுள் ஐஸ்மார்ட்’டிலும் ஆன்மிகத் தொடுதலுடன் அதிரடியான ஆக்ஷன் கிளைமாக்ஸ் காட்சி உள்ளது. பிரம்மாண்டமான சிவலிங்கமும், கிளைமாக்ஸ் சண்டை நடக்கும் பெரும் கூட்டமும் பார்வையாளர்களை நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கும்.
டீசரைப் போலவே, ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படமும் டபுள் ஆக்ஷன், எண்டர்டெயின்மெண்ட்டுடன் இருக்கும் என்பது தெளிவாகிறது. வழக்கம் போலவே இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது ஹீரோவை ஸ்டைலிஷ், மாஸ் மற்றும் அதிரடி நாயகனாக திரையில் காண்பிக்க உள்ளார். டீசரில் ஒற்றை வரியில் இடம்பெற்றுள்ள வசனங்களும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. தலைப்புக்கு ஏற்றவாறு டபுள் ஆக்ஷன், டபுள் எனர்ஜி மற்றும் டபுள் ஃபன்னாக ராமும் திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளார்.