‘சிக்ஸ்பேக்’ சீக்ரெட்ஸ் : சக ஹீரோக்களை நக்கலடித்த சித்தார்த்

Get real time updates directly on you device, subscribe now.

‘காவியத்தலைவனி’ல் கொஞ்சம் சோர்ந்து போயிருந்தாலும் மீண்டும் ஒரு கன்பார்ம் ஹிட்டடிக்கும் உற்சாகத்தில் இருக்கிறார் சித்தார்த்.

அவருடைய என்னைப்போல் ஒருவன் மார்ச் ரிலீசுக்குத் தயாராகி விட்டது. கன்னடத்தில் கிரவுட் பண்டிங் முறையில் தயாராகி பெரும் வசூலை அள்ளிய லூசியாவின் தமிழ் மேக் தான் இந்த என்னைப் போல் ஒருவன். இதில் சித்தார்த்துக்கு ஜோடி தீபா சன்னதி.

கன்னடத்துல இப்படி ஒரு படம் ரிலீசாகியிருக்குன்னு கேள்விப்பட்ட உடனே அதை நானே தயாரிக்கலாம்னு ப்ளான் பண்ணினேன். ஆனா எனக்கு முன்னாடியே அந்த ரைட்ஸை வாங்கிட்டார் தயாரிப்பாளர் சி.வி.குமார். உடனே நான் அவரோட அசோஸியேட் பண்ணிக்கிட்டேன். எனக்கு ரொம்பப்பிடிச்ச படத்துலே நானே ஹீரோவா நடிக்கிறேன் அதுவே சந்தோஷம் தான்.

என்றவர், நான் எம்.பி.ஏ படிச்சவன். மாசம் 25 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் வேலையை விட்டுட்டேன். அப்பா ‘ஏண்டா’ன்னு கேட்டாரு. ‘ஒரே வேலையை செய்யறதுக்கு போரடிக்குதுப்பா’ன்னு சொன்னேன்.

Related Posts
1 of 3

அதற்கப்புறம் நான் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்தப்ப, எனக்கு சம்பளம் வெறும் 2,000 ரூபாய் தான் கொடுத்தாங்க. இப்படித்தான் ஒரே மாதிரியான கதையை எடுக்கிறதை விட இந்தமாதிரி எதையாவது வித்தியாசமா பண்ணினா எனக்குப் பிடிக்கும். அதுதான் லூசியாவின் மூலக்கதை மாற்றங்கள் எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு என்றார்.

படத்தில் சித்தார்த் உட்பட வரும் எல்லா கேரக்டர்களுமே டபுள் ரோலில் வருகிறார்கள். ஒரு சித்தார்த் செம கலர் என்றால் இன்னொரு சித்தார்த் அட்டகருப்பு.

அட்டகருப்புன்னா அதுக்கு ஏதாவது மெனக்கிட்டீங்களா என்று கேட்டால்… ஒரு நமட்டுச் சிரிப்புடன் பேசுகிறார்.

சினிமாவுல ஹீரோக்கள் சிக்ஸ்பேக் வைக்கிறதையெல்லாம் பெரிய விஷயமா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதே மாதிரி உடம்பை மேக்கப் பண்ணி மாத்துறதையெல்லாம் பெருசா சொல்றாங்க. ஜிம்முக்கு போய் எக்சர்சைஸ் பண்ணினா சிக்ஸ்பேக் வந்துடப்போகுது. அதேமாதிரி நாள் முழுக்க வெயில்ல நின்னா உடம்பு கருப்பாயிடப்போகுது. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லீங்க… என்றாரே பார்க்கலாம்.