ஜெய்யின் எண்ணித்துணிக
ஜெய் தற்போது நடித்து வரும் புதிய படமான ‘எண்ணித் துணிக ‘திரில்லர் வகைப் படமாக தயாராக இருக்கிறது. ரெயின் அண்ட் ஏரோ என்டர்டெயிண் மெண்ட் நிறுவனத்துக்காக சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் எஸ்.கே.வெற்றி செல்வன் என்ற புதியவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் வசந்திடமும் ஒளிப்திவாளர் ரவி கே.சந்திரனிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர், ஏராளமான விளம்பரப் படங்களையும் எடுத்தவர். இன்று காலை (11-12-2019) ‘எண்ணித் துணிக’ படத்தின் படப்பிடிப்பு சம்பிரதாய பூஜையுடன் நடந்தது. இதில் படத்தில் நடிக்கும் நடிக நடிகையருடன் படத்தில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.