காமி – விமர்சனம்
சின்னச் சின்ன விசயங்களுக்கும் பெரிதாக மெனக்கெட்டுள்ள படம் நம் மனதோடு கனெக்ட் ஆகிறதா?
படத்தின் ட்ரைலர்லே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது காமி. அதனால் வித்தியாசமான கதை என்று தியேட்டருக்குள் சென்றால், கதையை விட்டு மேக்கிங்கில் மிரட்டியுள்ளனர்.
கதை?
ஹீரோ விஸ்வக் சென்-க்கு ஒரு வியாதி. அந்த வியாதிக்கான மருந்து இமயமலையில் 36 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே உருவாகும். அப்படி உருவாகும் மருந்தைப் பெற்று ஹீரோ சீரானாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை. இவையில்லாமல் மேலும் இரண்டு கதைகள் வந்து மெயின் கதையோடு கனெக்ட் ஆகிறது
ஹீரோ விஸ்வக் சென் எல்லாச் சவால்களையும் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். இந்தப்படத்திற்காக உடல் அளவில் பெரிதாக மெனக்கெட்டுள்ளார். ஹீரோயின்கள் சாந்தினி சவுத்ரி, அபிநயா துர்கா நல்லா நடிப்பை கொடுத்துள்ளனர். ஹரிகா பெட்டா உமா உள்ளிட்ட காஸ்டிங் ஏரியா எல்லோருமே பக்கா
படம் தொழில் நுட்பத்தரத்தில் குறையேதும் இல்லாமல் அமைந்துள்ளது. அதற்காக அனைத்து டெக்னிக்கல் டீமும் கடுமையான உழைப்பைப் போட்டுள்ளது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆர்ட் டிப்பார்ட்மெண்ட், சி.ஜி என எல்லாத் துறையும் முத்திரை
பேப்பரில் ஸ்ட்ராங்காக இல்லாமல் திரையில் எவ்வளவு வீரியம் காட்டினாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போலதான். கொஞ்ச கொஞ்சமாக திரைக்கதையில் எமோஷ்னலை கூட்டியிருந்தால் இந்த காமியை அய்யா சாமி என வணங்கி வரவேற்றிருக்கலாம்
2.75/5