ஹரா- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ரசிகனை சோதிக்கத் தவறியுள்ளதா ஹரா?

அன்பான குடும்பம் அழகான வாழ்வு என காலத்தைத் தள்ளி வருகிறார் மோகன். திடீரென அவரின் மகள் தற்கொலை செய்துகொள்ள,அதற்கான காரனத்தை கண்டு பிடிக்க முயல்கிறார். அவரின் விசாரணையின் உத்தி அவரை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு வருகிறது. மேலும் மோகனால் பாதிக்கப்பட்ட ஒரு காவலதிகாரியும் மோகனை பின் தொடர..அப்படியே ஹராவின் பயணம் தொடர்கிறது. நம்மால் தான் பொறுமையாக இருக்க முடியவில்லை

மோகன் தனது நல்ல நடிப்பால் படத்தைத் தாங்கியுள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் அவரது நடிப்பு நன்றாக வொர்க் ஆகியுள்ளது. அவரைத் தொடர்ந்து அனுமோல் கவனிக்க வைத்துள்ளார். மற்ற எத்தகைய கேரக்டர்களும் வேலைக்கே ஆகவில்லை

Related Posts
1 of 221

இசையால் இசை அமைப்பாளர் படத்தை காப்பாற்ற முயன்றுள்ளார். ஒளிப்பதிவாளர் தனது பெஸ்ட்-ஐ கொடுத்திருக்கலாம். லைட்டிங் ஷாட் கம்போசிங் மிகவும் மலினமாக உள்ளது.

ஒரே படத்திற்குள் நிறைய கதை, கிளைக்கதைகள் வைத்து படத்தை ஏகத்திற்கும் சொதப்பியுள்ளார் இயக்குநர். வெள்ளிவிழா நாயகன் மோகனின் கம்பேக் இப்படி சோகமாக அமையும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. சோகங்கள்
2/5