ஓடிடி ஸ்ட்ரீமாகிறது “ஹாட் ஸ்பாட்”!
சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைக் குவித்த, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் “ஹாட் ஸ்பாட்” திரைப்படம் வரும் மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகவுள்ளது.
கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், தினேஷ் கண்ணன் வெளியிட, ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசிய ஹாட் ஸ்பாட் திரைப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் கலையரசன், 96 பட ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சதீஷ் ரகுநாதன்- வான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், முத்தையன் எடிட்டிங் செய்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியான நொடியிலேயே பெரும் விமர்சனங்களைக் குவித்தது. படம் வெளியான பிறகு படத்தின் நெகட்டிவிடி மொத்தமும் பாஸிடிவிடியாக மாறியது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினார்கள். சமூகம் பேசத் தயங்கும் பல விசயங்களை, மிகத் தைரியமாக, மிகத் தெளிவாக கையாண்ட விதத்தில், இப்படம் பரவலான பாராட்டுக்களைப் பெற்றது.
தற்போதைய திரையரங்கு சூழ்நிலையில் இப்படம் திரையங்குகளில் முழுதாக 5 வாரங்களைக் கடந்து சாதனை படைத்தது. இப்படம் எப்போது ஓடிடியில் வெளிவருமென ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவுள்ளது.இப்படம் அமேசான் ப்ரைம், மற்றும் ஆஹா என இரண்டு முன்னணி ஓடிடி தளங்களில், வரும் மே 17 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.உங்கள் கோடை விடுமுறையை ஹாட் ஸ்பாட் திரைப்படத்துடன் கொண்டாடுங்கள்.