காதலில் விழுந்தார் லேகா வாஷிங்டன்!
அசரடிக்கிற அழகு இருந்தும் நடிகை லேகா வாஷிங்டனால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியிலும் பெரிதாக வர முடியவில்லை.
தமிழில் ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் வினய்க்கு தங்கச்சியாக நடித்தவர் அடுத்து ‘வா குவார்ட்டர் கட்டிங்’ படத்திலும் நடித்தார். கைவசம் எந்த படங்களும் இல்லாததால் நிஜக் காதலில் விழுந்திருக்கிறார் லேகா வாஷிங்டன்.
தங்கள் நிஜக் காதலை முடிந்த வரைக்கும் மறைக்க நினைக்கும் நடிகைகள் மத்தியில் முதல்முறையாக மனம் திறந்து கூறியிருக்கிறார்.
‘காதல் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நானும் ஒருவரை காதலிக்கிறேன். இது சினிமாவில் வரும் காதல் அல்ல, நிஜமான காதல். அவர் யார் என்பதை இப்போது சொல்லமாட்டேன்.
என்று கூறியிருக்கும் லேகா விரைவிலேயே இயக்குனர் அவதாரம் எடுக்கப் போகிறாராம்.