‘மொட்டை சிவா’வை பாராட்டிய இளையதளபதி விஜய்!
கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசான ‘ஒ காதல் கண்மணி’, ‘காஞ்சனா 2’ இரண்டு படங்களும் நல்ல வசூலோடு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படங்களில் ஒ காதல் கண்மணியைப் பார்த்த ரசிகர்கள் ரொமான்ஸ் படங்களை ஸ்டைலீசாக எடுப்பதில் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்பதை மணிரத்னம் மீண்டும் நிரூபித்து விட்டார் என்று ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் பெண்களையும், குழந்தைகளும் வெகுவாக கவர்ந்த காஞ்சனா 2 படத்துக்கும் திரையுலக பிரபலங்கள் தங்களது பாராட்டுகளை அப்படத்தின் இயக்குனரும், நடிகருமான லாரன்ஸுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே காஞ்சனா – 2 படத்தின் மெகா ஹிட் விஷயத்தை கேள்விப்பட்ட இளையதளபதி விஜய், நடிகர் ராகவா லாரன்ஸை தனது வீட்டிற்க்கு அழைத்து மனதார பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இளையதளபதி விஜய்யும், ராகவா லாரன்ஸும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் ஏற்கனவே விஜய்யின் பல படங்களுக்கு லாரன்ஸ் நடன இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் என்பதும் தெரிந்த விஷயம் தான்.
அப்படிப்பட்ட நல்ல நண்பர் விஜய் வாழ்த்தால் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.