இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

india-pakistan

ஹீரோ விஜய் ஆண்டனி ஒரு வக்கீல். ஹீரோயினும் சேம் ப்ளட். ரெண்டு பேரும் ஒரு ஆபீஸைப் போட்டு கேஸ் புடிக்க முதல்ல ஆபீஸ் தேடுறாங்க. விஜய் ஆண்டனி வீட்டோட சேர்ந்தாப்ல ஒரு ஆபீஸை பார்க்கிறார்.

ஹீரோயின் சுஷ்மாவும் இன்னொரு புரோக்கரை வெச்சு ஒரு ஆபீஸ் தேடுறார். ஆக மொத்தம் ரெண்டு பேரையும் ரெண்டு புரோக்கர்கள் ஒரே வீட்டுக்கு கூட்டு வந்து காட்டுறாங்க. அவங்க காட்டுற வீடு ரெண்டு பேருக்குமே பிடிக்குது.

ஆனா ஹவுஸ் ஓனர் வாடகை ஜாஸ்தியா சொல்றார். ‘நீ பாதி நான் பாதி’ன்னு வாடகையை ஷேர் பண்ணி ஒரே வீட்ல ரெண்டு ரூமை ஆளுக்கொரு ஆபீஸா டெக்கரேட் பண்ண தயாறாகுறாங்க.

ஒரே வீட்ல பக்கத்து பக்கத்துல ரூம்ல ரெண்டு வக்கீல் இருந்தா கேஷ் புடிக்கிறதுல சண்டை வரும்ல. அதனால தன் கூட இருக்கிறவர் வக்கீலா இருக்கக்கூடாதுன்னு ரெண்டு பேருமே அவங்கவங்க புரோக்கர்கிட்ட கண்டிஷன் போடுறாங்க. ஆனா கமிஷனுக்கு ஆசைப்பட்ட ரெண்டு புரோக்கர்களும் அந்த உண்மையை மறைக்கிறாங்க.

இந்த உண்மை ரெண்டு பேருமே வீட்டுக்கு வந்த முதல்நாளே ரூம் வாசல்ல தங்களோட நேம் போர்டை மாட்டுறப்போ தெரிய வருது.

அதுக்கப்புறம் ரெண்டு பேருக்குள்ள நடக்கிற ‘ஈகோ’ சண்டைகளைத்தான் ‘இந்தியா பாகிஸ்தான்’ மாதிரி அடிச்சிக்கிறாங்கன்னு காலத்துக்கேத்த மாதிரி டைட்டிலை வெச்சு ரெண்டு கண்ணுலேயும் தண்ணி வர்ற அளவுக்கு சிரிக்க வைக்கிறார் இயக்குனர் ஆனந்.

ஒரு ஹிட் கொடுத்தவுடன் அடுத்தடுத்து மொக்கை  கதைகளை டிக் செய்து ஒன்றிரெண்டு படங்களுடன் காணாமல் போகும் ஹீரோக்களுக்கு மத்தியில் நின்று நிதானமாக ஆடுகிறார் விஜய் ஆண்டனிஎன்பதற்கு இந்த படமும் ஒரு மினிமம் கியாரண்டி தான்.

‘நான்’, ‘சலீம்’ படங்களில் சைலண்ட் ஹீரோவாக வந்த விஜய் ஆண்டனி இதில் அதே சைலண்ட் பெர்பார்மென்ஸுடன் கூடுதலாக கலகலப்பூட்டுகிறார். ஆக்டிங், டான்ஸ், ஸ்டண்ட் சீன்ஸ்ன்னு நிஜத்துல ஹீரோவுக்கான எந்த கெத்தையும் காட்டாம கேரக்டர் என்ன கேட்குதோ அதை மட்டுமே செஞ்சிருக்கார்.

மெல்லினாவாக வரும் அறிமுகம் சுஷ்மா ராஜ் கோடம்பாக்கத்துக்கு கிடைத்த ‘குட்டி’ அனுஷ்கா. உசரத்துலேயும், அச்சு அசப்புலேயும் அப்படியே அனுஷ்காவை உரிச்சு வெச்சிருக்கார். சின்ன சின்ன சேஷ்டைகளை கூட ரசிக்க முடியுது. வெல்கம் டூ கோடம்பாக்கம் சுஷ்மா.

Related Posts
1 of 2

முதல் பாதியில் முக்கால்வாசி சென்னையில் நகரும் கதை அதன்பிறகு கிராமத்து பக்கம் போகிறது. அங்கிருந்து வரும் பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, யோகிபாபு, காளி,முனீஸ்ராஜா, டி.பி.கஜேந்திரன்னு ஒரு காமெடிப்பட்டாளத்தால டைம் நல்லாவே பாஸாகுது…

‘எங்க ஐயா தான் கிராமத்துல அதிகம் படிச்சவர் மூணாம் வகுப்ப, ஆறுமுறை பர்ஸ்ட் ரேங்க் எடுத்துருக்கார்…’ன்னு பசுபதிக்கு எண்ட்ரி கொடுக்கும் போது ஆரம்பிக்கிற காமெடி ‘எங்க பாட்டனோட முப்பாட்டனோட முப்பாட்டனோட’ன்னு முடியிற கிளைமாக்ஸ் வரை ரசிகர்கள் சிரிப்புக்கு கியாரண்டி.

கொஞ்ச சீன்கள்ல வந்தாலும் மனசுல நின்னுட்டுத்தான் போறார் விஜய் ஆண்டனியோட அம்மாவா வர்ற ஊர்வசி.

இந்த சிரிப்பு சத்தங்களுக்கு மத்தியில் விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் டிவிடி ஒரு கேரக்டராக வருது. கிளைமாக்ஸில் அதையும் காமெடியாக்கி விடுகிறார் இயக்குனர்.

இப்படி படம் முழுக்க ‘நோ லாஜிக் ஒன்லி மேஜிக்’ன்னு சொல்ற அளவுக்கு சின்ன சின்ன காமெடி சீன்கள் எக்கச்சக்கம்.

நகரத்தின் வேகம், கிராமத்தின் அமைதி இரண்டையும் அழகாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்.

பல கோடி பெண்களிலே, ஒரு பொண்ணப் பாத்தேன் மாமா…, வாடி குடி லேடி என எல்லா பாடல்களும் ஒன்ஸ்மோர் ட்ராக்குகள் தான். ஆனால் எல்லாப் பாடல்களிலும் விஜய் ஆண்டனியின் மியூசிக் சாயல் அப்பட்டமாக தெரியுதே..? கொஞ்சம் கவனிங்க தீனா தேவராஜன்.

முந்தின ரெண்டு படங்கள்ல இருந்து விஜய் ஆண்டனியை வித்தியாசப்படுத்தி காட்டணும்னு ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார் இயக்குனர் ஆனந். அதனால தான் அந்தப் படங்கள்ல பெரும்பாலும் சைலண்ட்டாகவே வந்துட்டு போன விஜய் ஆண்டனியை இதில் சீனுக்கு சீனுக்கு பேச வெச்சிருக்கார்.

ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்கும் இடையே உள்ள ஈகோங்கிற சின்ன விஷயத்தை வெச்சுக்கிட்டு ரெண்டரை மணி நேரம் டைம் போறதே தெரியாம சிரிக்க சிரிக்க ஒரு நான் ஸ்டாப் காமெடிப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்.