எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் இந்தியன்-2!
“வயதானாலும் இன்னும் உன் அழகும் ஸ்டைலும் மாறவேயில்ல” என்று ஒரு வசனம் படையப்பா படத்தில் வரும். ரஜினிக்கு அது எவ்வளவு பொருத்தமாக இருந்ததோ அதேபோல், “எத்தனை வருடம் ஆனாலும் எதிர்பார்ப்பு குறையவே இல்லை” என்ற வசனம் இந்தியன்2 படத்திற்கும் பொருந்தும். ஷங்கர் கமல் கூட்டணியில் மெஹா ஹிட்டடித்த இந்தியன் படத்தின் அடுத்தபாகம் வரும் 12-ஆம் தேதி வெளியாகிறது. அனிருத் இசை படத்தின் எதிர்பார்ப்பிற்கு ஒரு காரணம் என்றால், கமல் ஷங்கர் கூட்டணி மற்றொரு மெகா காரணம். மேலும் இந்திய அரசியலையும் அதிகாரிகளின் சூழ்ச்சி நிறைந்த லஞ்சத்தையும் 1996-ல் வெளியான இந்தியன் படம் பேசியது. “கடமையைச் செய்றதுக்கு லஞ்சம் கேட்பவர்களை செவியில் அறைந்து பாடம் புகட்டினார் இந்தியன் தாத்தா. அந்தத் தாத்தாவின் வருகை இன்றைய இந்தியாவிற்கும் தேவையாக இருக்கிறது என்பதை மையமாக வைத்து இந்தியன் 2 ரெடியாகியுள்ளது. இன்றைய இந்திய அரசியலின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை நறுக்குத் தெறித்தாற் போல் பேசியிருப்பதால் இந்தப் படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என வெயிட் பண்ணுகிறது இளைஞர் படை
வெயிட் பண்றோம் தாத்தா..வெயிட்டா வாங்க