படமே தயாரிக்காமல் ‘விருதுகளை’ வாங்கிக் குவிக்கும் தயாரிப்பாளர்!

Get real time updates directly on you device, subscribe now.

jsk

மீபத்தில் அறிவிக்கப்பட்ட 62-வது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த பிராந்திய மொழிப்படமாக ‘குற்றம் கடிதல்’ படத்துக்கு விருது கிடைத்தது.

இந்தப்படத்துக்கு விருது அறிவித்தவுடன் சந்தோஷமாக அந்தச் செய்தியை எல்லா மீடியாக்களிலும் பகிர்ந்து கொண்டார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார்.

அவர் சந்தோஷம் ரெண்டு நாள் கூட நிலைக்கவில்லை அதற்குள் பஞ்சாயத்து வந்து விட்டது. காரணம் ‘குற்றம் கடிதல்’ படத்தின் உண்மையான தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே வே இல்லை கிறிஸ்டி என்பவர் தான் அப்படத்தின் தயாரிப்பாளர்.

அவரிடம் படத்தை வாங்கி தனது பேனரில் ரிலீஸ் செய்து தருவதாகச் சொன்ன ஜே.எஸ்.கே பிறகு தானும் அதில் ஒரு தயாரிப்பாளராக மாறினார். அப்படியானால் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் பொதுவாகத்தானே அந்த விருது போய்ச் சேர வேண்டும். இங்கு தான் விளையாடி விட்டாராம் ஜே.எஸ்.கே.

விருது கமிட்டிக்கு படத்தை அனுப்பும் போது  தான் மட்டும் தான் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாகச் சொல்லி தன்னுடைய பெயரை மட்டுமே குறிப்பிட்டு அனுப்பியிருக்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட முதன்மை தயாரிப்பாளர் கிறிஸ்டி வருத்தப்பட்டதோடு தன் சார்பிலும் ஒரு சந்தோஷ அறிக்கையை வெளியிட அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.

இதற்கு முன்பும் கூட கெளதம்மேனன் தயாரித்த ராமின் ‘தங்கமீன்கள்’ படத்துக்கு தான் தான் தயாரிப்பாளர் என்பது போல சொல்லி விருதுகளை வாங்கிஅ பேட்டியெல்லாம் கொடுத்தார் ஜே.எஸ்.கே. இப்போது ‘குற்றம் கடிதல்’ படத்துக்கும் வேலையைச் செய்திருக்கிறார்.

அவரது இந்த செயல்களைப் பார்த்து இவர் ரொம்ப பப்ளிசிட்டி பிரியரா இருப்பார் போல… என்று நக்கல் செய்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

இப்படி ஒரு ‘விளம்பரம்’ அவசியம் தானா..?